Sunday, June 27, 2010

இலச்சினை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான இலச்சினையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்கள்.


தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டு உருவாகாப்பட்டிருக்கும் இந்த இலச்சினை பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. கடல்கோள்களை எதிர்கொண்டும், காலவெள்ளத்தைக் கடந்தும் சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகளும், அய்யன் திருவள்ளுவர் திருவடிகளில் சுருளும் அழகிய பின்னணியில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தத்துவ விளக்கங்களுக்கேற்ப மூன்று விரல் முத்திரைகளைக் கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், திருவள்ளுவர் சிலையோ அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலைக் குறிப்பிடும் வகையில் மூன்று விரல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் உலகத்தொன்மையான நான்கு நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படும் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் குறியீடுகளும் இடம் பெறுகின்றன. சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் செழித்து வளர்ந்த நகர்மய நாகரிகம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. சிந்துநதிக் கரையில் 1500 ஏக்கர் பரப்பளவில் செழித்தோங்கி 700 ஆண்டுகள் சிறந்து விளங்கியது சிந்துவெளி நாகரிகம். அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளிச் சின்னங்களுடன் கூடிய குறியீடுகள்-எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தின் கொங்கு மண்டலச் சூலூர், விழுப்புரம் அருகில் கீழவாளை, சோழமண்டலத்தில் மயிலாடுதுறை, செம்பியம் கண்டியூர் ஆகிய இடங்களிலும் கிடைத்துள்ளன.

படகும், கப்பலும் தமிழர்கள் திரைகடலோடித் திரவியம் தேடிய திறன்மிகு வரலாற்றையும், காளைச் சின்னம் தமிழர்களின் வேளாண்மைத் தொழில் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன. இலச்சினையில் ஏழு குறியீடுகள்/சின்னங்கள் இடம் பெறுகின்றன. ஏழு என்பது தமிழர்களுக்குரிய கணக்கீட்டு முறையில் சிறப்பான எண்ணாகும். ஏழு நாட்கள், அகப்பொருள் திணைகள் ஏழு, புறப்பொருள் திணைகள் ஏழு. திருக்குறள் 133 அதிகாரங்கள், அறத்துப்பாலில் பாயிரவியல் தவிர 34 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள், இவற்றின் கூட்டுத்தொகை ஏழு எனும் எடுத்துக்காட்டுகள் ஏழின் சிறப்பை விளக்கிச் சொல்லும். ஏழு என்பது 'எழு' என்பதாகவும் 'எழுபதில்' இடம்பெறும். இலக்கை எட்டுவதற்கு எழுவது/'எழு' என்பதாகவும் அமைகிறது.

இந்த மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக(Motto) "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அமைந்துள்ளது. ஒலைச்சுவடியில் இடம் பெற்றுள்ள எடுத்துரைக் குறிப்பு, இன்றைய உலகிற்குத் தமிழ்ச் செம்மொழி வழங்கும் கொடையாக கருதத்தக்கது. இன்றைய உலகின் தேவை நல்லிணக்கம், சாதி, மதம் கடந்து மக்கள் மனநிறைவோடு வாழும் மனிதநேயம் செறிந்த வாழ்க்கை. இதற்குத் தேவை வேறுபாடற்ற உலகம். ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகிற்கு அளிக்கும் கருத்துக் கொடை "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதாகும். இச்சிந்தனை 2000 ஆண்டுகளுக்கும் முன்பே தமிழ்ச் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும்.

 நன்றி: தினகரன்

Saturday, June 26, 2010

செம்மொழி மாநாடு - நேரலை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகள் பெரியார் வலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.. இறுதிநாள் நிகழ்ச்சிகள் பார்க்க...

Thursday, June 24, 2010

இரண்டாம் நாள் கவியரங்கம் - காட்சிகள்!

"தமிழ்நாட்டில்...
மார்வாடி இருக்கிறான்.. மார்வாடியாக...
மலையாளில் இருக்கிறான்... மலையாளியாக...
தெலுங்கன் இருக்கிறான்... தெலுங்கனாக...
தமிழன் இருக்கிறான்... தமிழனாக இல்லை...!"

கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் “கவியரங்கம்” தொடங்கியது.
காட்சிகள்:



lowscriptaccess="always" id="utv793433" name="utv_n_480672" src="http://www.ustream.tv/flash/video/7861209" type="application/x-shockwave-flash" />

lowscriptaccess="always" id="utv793433" name="utv_n_480672" src="http://www.ustream.tv/flash/video/7861209" type="application/x-shockwave-flash" />

கலைஞர் ஒரு வேலுப்பிள்ளை! - அப்துல் காதர்

http://www.easylive.tv/
http://webvision.periyar.org.in/

Wednesday, June 23, 2010






கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கிராமிய கலை நிகழ்ச்சியை பொது மக்கள் கண்டு களித்தனர்

தொடக்கவிழாவில் கலைஞர் தலைமையுரை

எதிர்காலத்தில் கணினி தமிழ்- அறிவியல் தமிழ்
மேலும் வளர்த்தெடுக்க ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு
கோவை, ஜூன் 23_ இனி எதிர்காலத்தில் கணினித் தமிழ், அறிவி-யல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுத்-திட, ஆய்வுகளை மேற்-கொள்ள, திட்டங்களை வகுத்திட இம்மாநாடு நடைபெறுகிறது என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் கூறி விளக்க உரையாற்றினார்.
உரை வருமாறு
உலகத் தமிழ்ச்செம்-மொழி மாநாட்டினைத் தொடங்கி வைத்து, கலைஞர் மு.கருணாநிதி விருது வழங்கி, விழாப் பேருரையாற்ற வருகை தந்திருக்கும் மேதகு இந்-தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா தேவி-சிங் பாட்டீல் அவர்களே!
தடைக் கற்கள் பல-போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு தமிழகத்தின் மீதும்_ தமிழ்நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அன்-பின் காரணமாக-வும்_பற்றின் காரண-மாக-வும் வருகை தந்துள்ள தங்களுக்கு உலகம் முழு-வதும் வாழ்கின்ற தமி-ழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கக் கடமைப்-பட்டிருக்கிறேன்.
உலகத் தமிழ்ச்செம்-மொழி மாநாட்டின் சிறப்பு மலரை வெளி-யிட்டு, வாழ்த்துரை வழங்க, வருகை தந்திருக்-கும் மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு.சுர்ஜித் சிங்-பர்னாலா அவர்களே!
தமிழக அரசின் நிதிய-மைச்சர் இனமானப் பேராசிரியர், தமிழகத்-தின் துணை முதலமைச்-சர் தம்பி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே!
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கே வருகை தந்திருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, ஆய்வறிஞர்களே, கவிஞர்-களே, தமிழ் ஆர்வலர்-களே, தமிழ் அன்பர்-களே! என் உயிரினும் மேலான அன்பு உடன்-பிறப்புகளே!
உங்கள் அனைவருக்கும் நன்றி
கோவையில் நடை-பெறு-கின்ற இந்த உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுக்கு, மடை திறந்த வெள்ளமெனத் திரண்டு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தையும் உள்ளம் நிறைந்த வர-வேற்-பினையும் தெரி-வித்துக்கொள்கிறேன்.
காவிரி தீரத்தின் நெற்-களஞ்சியம் தஞ்சைத் தரணியிலே, கருக்கலிலே கண் விழிக்கும் திருக்-குவளை என்னும் சிற்-றூரில், கவிபுனையும் கற்பனைத் திறனும், தமி-ழிசை ஆற்றலும், வேளாண்மை நாட்ட-மும் மிகுந்த முத்துவேல-ருக்கும் அஞ்சுகத்தம்மை-யாருக்கும் மகனாய்ப் பிறந்து, 14 வயதில்
14 வயதினிலே_ வீரத்-தமிழ் கொஞ்சம் நாட்-டிலே எனும் அணி-வகுப்புப் பாடல் இயற்றி, தமிழ் வாழ்க, தமிழர் வெல்க என்று புலி, வில், கயல் பொறித்த கொடி பிடித்து, தமிழ் மாணவர் பட்டாளத்திற்குத் தலைமை தாங்கி, ஆர்ப்-பாட்டப் போர்ப்பாட்-டுடன் பேரணி நடத்தி,
அதே வயதில், திரா-விடர் விழித்துக்கொள்-ளும் காலம் நெருங்கி-விட்டது. பெரும்பாலான திராவிடர் வீறு கொண்-டெழுந்து விட்டனர். நாட்டைக் காப்பாற்றவும், கலை நாகரிகத்தைக் காக்-கவும் கச்சை கட்டிவிட்ட-னர் என்ற முன்னுரை-யோடு, செல்வசந்திரா என்ற நாடகத்தை எழுதி,
17 வயதில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற ஓர் அமைப்பி-னைத் தோற்றுவித்து, அதன் ஆண்டு விழாவுக்-கென கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக்கூட்டம்! கிழித்தெறியத் தேடுது-காண் பகைக்கூட்டத்தை என்ற பாடல் வரிகளைப் கிழவன் கனவு எனும் சீர்திருத்த சிறுகதையினை வழங்கி, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமிருந்து வாழ்த்தாகப் பெற்று, பெரியார், அண்ணா அரவணைப்பில்....
திராவிட நாடு தொடக்க இதழ் ஒன்றில், இளமைப் பலி என்ற கட்டுரை எழுதி, அறிஞர் அண்ணா அவர்களின் கவனத்தைக் கவர்ந்து, 20 வயதில் சேரன் என்ற புனை பெயரோடு முரசொலி இதழைத் தொடங்கி, கிழவன் கனவு எனும் சீர்திருத்த சிறுகதையினை வழங்கி,
பின்னர் தந்தைபெரியார் அவர்களின் அரவணைப்பிலும், அறிஞர் அண்ணா அவர்களின் அன்பிலும் நனைந்து, வளர்ந்து, தமிழையே தோன்றாத் துணையாகவும், தோளேந்திய ஆயுதமாகவும் கொண்டு_ கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், அரசியல் எனப்பல்வேறு துறைகளிலும் பணி புரிந்து_ ஆட்சியில் இருக்கும்-போதும், இல்லாதபோதும், தமிழ் அன்னைக்கு இயன்ற வழியனைத்தும், முனைந்து இடையறாது பணியாற்றி, அணிமணிகள் பலவும் தேடிக்கொணர்ந்து சூட்டிவரும் எனக்கு,
கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கும், அதன் தொடக்க விழாவிலே தலைமையேற்பதற்கும் கிட்டிய வாய்ப்பினை பெருமையாகக் கருதுகிறேன். இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்பொழுது நடைபெறுகிற இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை, உலகத் தமிழ் மாநாடுகள். இப்பொழுது நடைபெறுவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.
தமிழ் உலகமொழி
உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில் உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை மட்டுமல்ல, பொருத்தமானவையும் ஆகும். தமிழ் உலகமொழி மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், ஞால முதல்மொழி தமிழே (The Primary Classical Language of the World) என்று நிறுவிக் காட்டியிருக்கிறார்.
மூலத்தாய்மொழிச் சொற்கள் உலக மொழிகளில், சொல் வடிவில், உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக உலக மொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவுப் பெயர்கள், நான், நீ அவன் எனும் மூவிடப் பெயர்கள், நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கைப் பெயர்கள் தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்ட-வையாக உள்ளன. தமிழோடு தொடர்-பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலகமொழிகளில் இல்லாததால் தமிழே உலக முதல்தாய் மொழி எனும் தகுதியைப் பெறுகிறது.
உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலைத் தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என அறியலாம்.
கி.மு. 10ஆம் நூற்றாண்டில்....
கி.மு. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசனாகிய சாலமனுக்கு தமிழகக் கப்பல்கள் மயில் தோகையையும், யானைத் தந்தத்தையும், வாசனைப் பொருள்களையும் கொண்டு சென்றன. வடமொழியில் வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச்-சொற்கள் இருப்பதை ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார். இதிலிருந்து வடமொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை அறியலாம். வால்மீகி இராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக் கருதப்படுகிறது. கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மவுரியரின் அமைச்சரான சாணக்கியர் தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்-குளித்தலைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். கி.மு.350இல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞரான காத்தியாயனார் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பாரதப் போர் பற்றி வரும் குறிப்பில், புறநானூற்றில் பாண்டவர் அய்ந்து பேருடன், 100 துரியோதனாதியர்களும் போரிட்ட-போது அந்த இருபக்கப் படைகளுக்கும் பெருந்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ் சேரலாதன்_சேரன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்று அழைக்கப்-பட்டார். பாரதப் போர் நடைபெற்ற காலம் கி.மு.1500 எனப்படுகிறது. அப்படியானால் இந்தச் சேரனின் காலம் கி.மு.1500 ஆக இருக்க வேண்டும். இவையனைத்தும் தமிழ் இனத்தின் தொன்மையையும், தமிழ் மொழியின் தொன்மை-யையும் புலப்படுத்தும். பேரறிஞர்களான ஜான் மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மாட்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர் திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள் எனவும், அவர்களின் மொழி திராவிட மொழிதான் எனவும் உறுதிப்-படுத்தியி-ருக்கின்றனர்.
திராவிடப் பண்பாடு
சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிடப் பண்பாடு, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிந்துவெளிக் குறியீடுகளைப் பழந்தமிழ் இலக்கியங்-களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம் என்று கடந்த 40 ஆண்டுகளாகச் சிந்துவெளிப்பண்பாட்டு வரி-வடிவங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் அய்ராவதம்மகாதேவன் கூறியிருக்கிறார்.
இன்று கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறும் ஃபின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா -_ சிந்துவெளிப் பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன்வைத்து, அத்துறையில் தொடர்ந்து அரும்பணியாற்றி வருகிறார். சிந்துவெளியினர் திராவிட மொழி பேசுபவர்களே என்பதற்கான தகுந்த ஆதாரங்களை அவர் விரிவாகக் கூறியுள்ளார்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்
அகநானூறு, புறநானூறு போன்ற கடைச் சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது; தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது; சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.
பண்டைத் தமிழர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணம் செய்து, உச்சயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா), தக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்திய தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வாணிகம் செய்தார்கள்.
தமிழக வாணிகர் அயல்நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வணிகரும் தமிழகத்திற்கு வந்து வாணிகம் செய்தார்கள். அக்காலத்தில், வாணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே, அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளைப் பேசிய மக்கள் தங்கியிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்
என்று சிலப்பதிகாரமும்;
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம் என்று பட்டினப்பாலையும் எடுத்துரைக்கின்றன.
இன்னின்ன தகுதிகள்
தமிழ்நாட்டிற்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேரநாட்டின் முசிறித் துறைமுகத்திற்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகளின் காரணமாகவும், தமிழ் உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழி-யாயிற்று. அதன் தொன்மையாலும், தனித்தன்மையா-லும், முதன்மைச் சிறப்பினாலும், தமிழ் உலக முதல் தாய்மொழியாக _ உலகத் தமிழாக ஒப்புக் கொள்ளப்-பட்டுள்ளது. ஒரு மொழி செம்மொழியாகக் கூறப்படுவதற்கு இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று வரையறுக்கப்-பட்டுள்ளது. தொன்மை (Antiquity), தனித்தன்மை (individuality) பொதுமைப் பண்பு (Common Character), நடுவுநிலைமை (Neutrality), தாய்மைத் தன்மை (Parental Kinship) மொழிக்கோட்பாடு (Linguistic Principles) இலக்கியவளம் (Literary Prowess), உயர் சிந்தனை (Noble Ideas and Ideals) பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்-தான், அது செம்மொழியாகும். இந்த பதினோரு தகுதிகளை மட்டுமல்ல; இந்தத் தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான், தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலே உள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலே பிறமாநிலங்களிலே உள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற பார்வையாளர்களின் ஒரு பகுதி (கோவை:23.6.2010)
பரிதிமாற் கலைஞர்
தமிழ்ச் செம்மொழியே என முதன் முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற் கலைஞர் அவர்கள் ஆவார்கள். தமிழ்ச் செம்மொழி என்று முதன் முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். அயர்லாந்து நாட்டில் ஷெப்பர்ட்ஸ் காலனி என்ற இடத்தில் வாழ்ந்த இவர் அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில் தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர். அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார். தமிழ் -_ செம்மொழி என்னும் அங்கீகா-ரத்தைப் பெற வேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தலைநகர்த் தமிழ்ச் சங்கங்கள் போன்ற அமைப்புகளும், சென்னைப் பல்கலைக் கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழகத்திலே உள்ள பல்கலைக் கழகங்களும்; மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் ஜான்சாமுவேல், திரு. மணவை முஸ்தபா, முனைவர் அவ்வை நடராசன், முனைவர் பொற்கோ போன்ற தமிழறிஞர்களும்; டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி, டாக்டர் கமில் சுவலபில், டாக்டர் ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.
எனினும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்தக் குரல்; காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய் கவனிப்பாரற்றுப் போயிற்று.ஆனால், அரசியல் வானில் துருவ நட்சத்திரம் போன்று, மத்தியில் தியாகத் திருவிளக்காம் திருமதி சோனியாகாந்தி அவர்களின் வழிகாட்டுதலிலும், டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் தலைமையிலும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தது. அதற்குப் பின்னர்தான்; தமிழைச் செம்மொழியெனப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 12.10.2004 அன்று தமிழ், செம்மொழி என்ற பிரகடன அறிவிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் திருமதி சோனியா காந்தி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில்.
Dear Thiru Karunanidhiji,
Ihave received your letter of 28th October. I am glad that all the formalities for declearing Tamil as a Classical Language have now been completed. This is an achievement for all the constituents of the UPA Government, but particular credit goes to you and your party”
அதாவது, தமிழைச் செம்மொழியாக ஆக்குவ-தற்குத் தேவைப்பட்ட முறையான சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அது நிறைவேறிவிட்டது. இந்தச் சாதனைக்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் காரணம் என்றாலும்கூட, குறிப்பாகவும், சிறப்பாகவும், நீங்கள்தான் இதற்குக் காரணம். உங்கள் தலைமையிலே உள்ள திராவிட முன்னேற்றக் கழகம்தான் இதற்குக் காரணம் என்று சோனியா காந்தி அவர்கள் எழுதியிருந்தார்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதனை நான் ஒரு கடிதமாக அல்ல; காலாகாலத்திற்கும், இன்னும் நூறாண்டு காலம், இருநூறாண்டு காலத்திற்கும் பிறகு, என் கொள்ளுப்பேரன் எடுத்துப் படித்து, நம்முடைய தாத்தா கட்டிக் காத்த செப்பேடு இது என்று பாராட்டுகின்ற அளவிற்கு ஆக வேண்டுமென்ற ஆர்வமும் நம்பிக்கையும் உள்ளவன் நான்.
எழுப்பப்பட்டு வந்த குரல்
ஒரு நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல் _ குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத் தொடங்கியதற்குப் பிறகு -_ தமிழ் செம்மொழி என்ற பிரகடன அறிவிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டதையொட்டி நடைபெறுகிற முதல் மாநாடு இது என்பதால்; தமிழன் பெயரால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற திருப்பெயரில் இந்த மாநாடு கோவை மாநகரிலே நடைபெறுகிறது.
அய்யாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ்மொழியை; இனி எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு _ கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுத்திடவும்; இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழிபெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப் புறவியல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்-படுத்திடவும், சிந்துசமவெளி முதல் ஆதிச்சநல்லூர், கொடுங்கடல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேலும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்திடவும்; இந்தமாநாடு இப்போது கொங்கு பூமயிலே நடைபெறுகிறது.
வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்புவெளிக் குன்று -_ கிடக்கும்
களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டு
குளித்தண் டலையளவும் கொங்கு
என்று ஒரு காலத்தில் கொங்கு நாட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் சரித்திரத்தில்- _ சங்க காலம் தொடங்கி இன்று வரை _ தனி இடம் பெற்றிருப்பதும் _ என்னை முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக அனுப்பி வைத்ததுமான குளித்தலை உள்ளிட்டதும் _ கொங்கு நாடாகும். ஆம், குளித்தண்டலையளவும் கொங்கு.
கோலோச்சிய கொங்கு பூமி
தமிழகத்தில் பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், அதியன், நள்ளி என்னும் எழுவரை மட்டும் வள்ளல்கள் என வரையறுத்துக் கூறினர் சங்ககாலத்துச் சான்றோர்கள். இவ்வெழுவர்க்குப் பின்னர், அவ்வெழுவர் போல ஈதற்கு யான் உளேன் என்ற வள்ளல் குமணனோடு, சங்கால வள்ளல்கள் எண்மராவர். அவ்வெண்மரில், பேகன், அதியமான், ஓரி, குமணன் ஆகிய நால்வர் கொங்கு நாட்டினர். அதுமட்டுமல்ல, கடியநெடுவேட்டுவன், நன்னன், பூந்துறை, ஈந்தூர்க்கிழான், கொண்கானங்கிழான், விச்சிக்கோ, தாமான் தோன்றிக்கோன், மோகூர்ப்-பழையன் ஆகிய சங்ககாலத் தலைவர்களும், பழைய கோட்டைச் சர்க்கரை, மும்முடிப் பல்லவராயர், காடையூர்க் காங்கேயர், கொற்றை வேணாடுடையார், மசக்காளி மன்றாடியார், வணங்காமுடி வாணராயன், காளிங்கராயன், பாரியூரான், உலகுடையான், அகளங்கன், இம்முடிச்சோழியாண்டான், தீரன் சின்னமலை, கொல்லிமழவன் போன்ற பிற்கால சங்கத் தலைவர்களும் கோலோச்சிய பூமி கொங்கு பூமி.
அஞ்சி அத்தை மகள் நாகையார், அதியன் விண்ணத்தனார், அந்தி இளங்கீரனார், ஆலத்தூர்க்-கிழார், ஆவியார், இரும்பிடர்த்தலையார், எருமை வெளியனார், கருவூர்க் கண்ணம்பாளனார், கருவூர்க்கிழார், கருவூர்க்கோசனார், கருவூர்ச் சேரமான் சாத்தனார், குடவாயிற்கீரத்தனார், கொல்லிக் கண்ணனார், செங்குன்றூர்க்கிழார், பெருந்தலைச் சாத்தனார், பொன்முடியார் போன்ற சங்காலப் புலவர்கள் பாடிப் பைந்தமிழ் வளர்த்த பூமி இந்தக் கொங்கு பூமி.
இத்தகைய புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அந்த மாநகரில் அனைத்து வகையிலும் அழகும், பொருத்தமும் நிறைந்த இடத்தில் _ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குகிறது. மாநாட்டினைத் தொடங்கி வைத்திட, பெண்ணின் பெருமைக்கும், இந்திய மண்ணின் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிடும் மேதகு குடியரசுத்தலைவர் திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் நமது அன்பான அழைப்பினையேற்று இங்கே வருகை தந்திருக்-கிறார்கள். மாநாட்டுச் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கிட மேதகு தமிழக ஆளுநர் எனது மேன்மைமிகு நண்பர் திரு. சுர்ஜித் சிங்பர்னாலா அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள். உங்களோடு இணைந்து, அவர்களை வரவேற்று, உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாத் தலைமையுரையினை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!.
நன்றி: விடுதலை

தொடங்கியது செம்மொழி மாநாடு


கோவை, ஜூன் 23_ கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக முதலமைச்சர் கலைஞர் தலைமையில் குடியரசுத் தலைவர் பிர-திபா தேவிசிங் பாட்டீல் தொடங்கி வைத்துப் பேருரையாற்றினார்.
மாநாட்டில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற-னர். உலக மக்கள் ஒன்று திரண்டுள்ளனர் கோவை-யில். கோவை மாநகரமே விழாக்கோலமாய் காட்சி-யளிக்கிறது.
கோவையில் இன்று (23.6.2010) காலை 10.30 மணியளவில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்கியது.
மாநாடு தொடங்கி-யதும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர் சிவசிதம்பரம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். அதைத் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாட்டுக்காக தயாரிக்-கப்பட்ட ஏ.ஆர்.-ரகுமான் இசையில் முதல்வர் கலை-ஞர் இயற்றிய மய்ய-நோக்குப் பாடல் ஒலி-பரப்பப்-பட்டது.
முன்னதாக மாநாட்-டிற்கு வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா தேவி-சிங் பாட்டீல் அவர்-களுக்கு தமிழக முதல-மைச்சர் கலைஞர் அவர்-கள் பொன்னாடை வழங்கி உலகத் தமிழ்ச்செம்-மொழி மாநாட்டு நினை-வுப்பரிசை வழங்கி சிறப்-பித்தார்.
மாநாட்டு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கல்
பின்னர் செம்மொழி மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரும், தமிழக துணை முதலமைச்சரு-மான மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரை-யும் வரவேற்று பேசிய-தோடு, செம்மொழி மாநாடு தொடக்க-விழா-வில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழக முதலமைச்சர் கலைஞர், நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், ஃபின்-லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோபர்ப்போலா, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜ்ஹார்ட், முனைவர் வா.செ.குழந்தைசாமி, இலங்கை நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கா.சிவதம்பி ஆகியோ-ருக்கு, உலகத் தமிழ்ச்-செம்-மொழி மாநாட்டின் நினைவாக நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்-பித்தார்.
தமிழக துணை முதல-மைச்சருக்கு செம்மொழி மாநாட்டின் தனி அலு-வலர் கா.அலாவுதீன், நினைவுப் பரிசு வழங்கி-னார். அதே போல் தமிழக அரசின் தலை-மைச் செயலாளர் கே.எஸ்.-சிறீபதி அவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
தமிழ் அறிஞர்கள் வாழ்த்துரை
பின்னர் செம்மொழி மாநாட்டின் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பேரா-சிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வா.செ.குழந்-தை-சாமி, இலங்கை நாட்-டைச் சேர்ந்த பேராசிரி-யர் கா.சிவதம்பி ஆகி-யோர் வாழ்த்துரை வழங்-கினர்.
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
பின்னர் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறுபவர் ஃபின்-லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை வாசித்து தகுதியுரை நிகழ்த்தினார்.
பின்னர் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்-கள் கலைஞர் மு.கருணா-நிதி செம்மொழித் தமிழ் விருதை ஃபின்லாந்து நாட்டின் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா-வுக்கு வழங்கி சிறப்பித்-தார். அடுத்து ரூ.10 லட்-சம் காசோலையினையும் வழங்கினார். செம்மொழி மாநாட்டு சிறப்பு மலர்
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரை தமிழக ஆளுநர் பர்-னாலா வெளியிட, குடிய-ரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பெற்றுக்-கொண்-டார்.
பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு தமி-ழக முதலமைச்சர் கலை-ஞர் அவர்கள் நினைவுப்-பரிசு வழங்கி சிறப்பித்-தார். பின்னர் பேராசிரி-யர் அஸ்கோ பர்ப்போலா வாழ்த்துரை வழங்கினார்.
முதல்வர் கலைஞர்
அடுத்து மாநாட்டு தலைமையுரையான எழுச்சி உரையை தமிழக முதலமைச்சர் கலைஞர் ஆற்றினார்.
இதையடுத்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்-னாலா அவர்கள் சிறப்பு-ரையாற்றினார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்-கள் முறைப்படி உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்-டைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை-யாற்றினார்.
உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாட்டின் தொடக்கவிழாவில் தமி-ழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.சிறீ-பதி இ.ஆ.ப. நன்றி கூறினார்.
உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாடு தொடக்க-விழா பிற்பகல் 12.15 மணி அளவில் நிறைவுற்றது

கோவையில் குவிந்த தமிழறிஞர்கள் எங்கெங்கும் தமிழ் மணம்

உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாட்டுக்காக கோவையில் தமிழறி-ஞர்கள் குவிந்துள்ளனர். இதனால், எங்கு பார்த்-தாலும் தமிழ் வெள்ள-மாக, கோவை மாநகர் முழுவதும் தமிழ் மணம் வீசிக் கொண்டிருக்கிறது.
மேளதாளங்களுடன் நாதஸ்வரம் ஊதியபடி, கலைஞர்கள் வரவேற்புக் கொடுக்க, பெரும் ஆச்சரியத்துடன் கோவைக்கு வந்து இறங்கியுள்ளனர் பன்னாட்டுத் தமிழறிஞர்கள்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட பன்னாட்டுத் தமிழறிஞர்கள் குழு கோவை வந்து சேர்ந்துள்ளது. தொடர்ந்து விமான நிலையத்திற்குத் தமிழறிஞர்கள் குழுவினர் வந்தவண்ணம் உள்ளனர்.
இவர்களுக்கு விமான நிலையத்தில் பலமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாதஸ்வரம் ஒலிக்க, மேளதாளம் முழங்க மாலை அணிவித்து அனைவரையும் வரவேற்புக் குழுவினர் வரவேற்று அவர்கள் தங்க வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
மாநாட்டிற்கு, மலேசிய முன்னாள் அமைச்சரும் மலேசியா இந்திய காங்கிரஸ் தலைவருமான டத்தோ சாமிவேல் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மதியம் கோவை வந்தார். அதேபோல, மலேசிய அமைச்சர் சுப்ரமணியமும் கோவை வந்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து 25 பேர் கொண்ட குழு வந்துள்ளது. அதேபோல மலேசிய, தமிழ்த் எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் கோவை வந்துள்ளது.
கோவை வந்துள்ள தமிழறிஞர்கள் மாநாட்டுப் பந்தலின் முகப்பைப் பார்த்துப் பிரமிக்கின்றனர். அரண்மனை போன்ற அந்த வடிவலங்காரம் அவர்களை வியக்க வைக்கிறது. மிகுந்த ஆர்வத்துடன் அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் பார்த்து மகிழ்கின்றனர்.
பன்னாட்டுத் தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர்த் தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் கோவையில் குவிந்துள்ள-தால் கொங்கு மண்டலம் எங்கும் தமிழ் வெள்ளமாகக் காணப்படுகிறது. தமிழர்களின் இந்தத் தமிழ்ச் சங்கமம் கோவை நகரையே தமிழ் மணத்-தில் மூழ்கடித்துள்ளது.